search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாடா மோட்டார்ஸ்"

    • டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 10 ஆயிரம் என்று துவங்குகிறது.
    • நெக்சான் ஃபேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காருக்கான முன்பதிவு செப்டம்பர் 4-ம் தேதி துவங்கியது. முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் ஆகும். நெக்சான் ஃபேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், தற்போது இதன் விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 10 ஆயிரம் என்று துவங்குகிறது. இந்த காரின் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 13 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. புதிய நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் 11 வேரியண்ட்கள் மற்றும் ஆறு வித்தியாசமான நிறங்களிலும் கிடைக்கிறது.

     

    புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஸ்ப்லிட் ரக எல்.இ.டி. ஹெட்லேம்ப், சீக்வன்ஷூவல் இண்டிகேட்டர்கள் பொனெட்டின் இருபுறமும் வைக்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் புதிய அலாய் வீல்கள், முற்றிலும் புதிய நிறத்தில் கிடைக்கிறது.

    நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான கிரவுண்ட் கிளியரன்ஸ் 208mm ஆக இருக்கிறது. காரின் பின்புறத்தில் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் உள்ளது. இத்துடன் இலுமினேட் செய்யப்பட்ட ஸ்ட்ரிப் வழங்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள பம்ப்பர் ரி-ப்ரோஃபைல் செய்யப்பட்டு செங்குத்தாக பொருத்தப்பட்டு இருக்கிறது.

    இதில் உள்ள டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை முழுமையாக கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும். இத்துடன் வென்டிலேட் செய்யப்பட்ட இருக்கைகள், உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் இருக்கைகள் (ஓட்டுனர் மற்றும் அவரின் அருகில் இருப்பவைக்கு மட்டும்) வழங்கப்பட்டு இருக்கிறது.

    2023 டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 118 ஹெச்.பி. பவர், 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், AMT கியர்பாக்ஸ் மற்றும் 7 ஸ்பீடு DCT யூனிட் மற்றும் ஷிஃப்ட் பை வயர் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதில் உள்ள 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 113 ஹெச்.பி. பவர், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது AMT யூனிட் வழங்கப்பட்டு உள்ளது. 

    • டாடா நெக்சான் EV ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • டாடா நெக்சான் EV ஃபேஸ்லிஃப்ட் மாடல் இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    டாடா நெக்சான் EV ஃபேஸ்லிஃப்ட் மாடல் விவரங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த காருக்கான முன்பதிவுகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் துவங்கி இருக்கிறது. அந்த வகையில் டாடா நெக்சான் EV ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்பதிவு அதிகாரப்பூர்வ ஷோரூம் மற்றும் ஆன்லைன் வலைத்தளங்களில் நடைபெறுகிறது.

    இந்திய சந்தையில் புதிய டாடா நெக்சான் EV ஃபேஸ்லிஃப்ட் மாடல் கிரியேடிவ் பிளஸ், ஃபியர்லெஸ், ஃபியர்லெஸ் பிளஸ், ஃபியர்லெஸ் பிளஸ் எஸ், எம்பவர்டு மற்றும் எம்பவர்டு பிளஸ் என ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் மொத்தத்தில் ஏழுவித நிறங்களில் கிடைக்கிறது.

     

    அம்சங்களை பொருத்தவரை நெக்சான் EV ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 12.3 இன்ச் அளவு கொண்ட டச்-ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் மொபைல் கனெக்டிவிட்டி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், பேடில் ஷிஃப்டர்கள், 2-ஸ்போக் ஸ்டீரிங் வீல், எலெக்ட்ரிக் சன்ரூஃப் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் கூல்டு குளோவ் பாக்ஸ், 360 டிகிரி கேமரா, ஜெ.பி.எல். பிராண்டின் 9-ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர் வழங்கப்படுகிறது.

    டாடா நெக்சான் EV ஃபேஸ்லிஃப்ட் மாடல் மீடியம் ரேன்ஜ் மற்றும் லாங் ரேன்ஜ் என இரண்டு வித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவைகளில் முறையே 30 கிலோவாட் ஹவர் மற்றும் 40.5 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இவை முறையே 325 கிலோமீட்டர்கள் மற்றும் 465 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.

    புதிய டாடா நெக்சான் EV ஃபேஸ்லிஃப்ட் மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 8.9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 150 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    • புதிய டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • 2023 டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காருக்கான முன்பதிவு செப்டம்பர் 4-ம் தேதி துவங்க இருக்கிறது. புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஸ்ப்லிட் ரக எல்.இ.டி. ஹெட்லேம்ப், சீக்வன்ஷூவல் இண்டிகேட்டர்கள் பொனெட்டின் இருபுறமும் வைக்கப்பட்டு இருக்கிறது.

    பக்கவாட்டில் புதிய அலாய் வீல்கள், முற்றிலும் புதிய நிறத்தில் கிடைக்கிறது. நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான் கிரவுண்ட் கிளியரன்ஸ் 208mm ஆக இருக்கிறது. காரின் பின்புறத்தில் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் உள்ளது. இத்துடன் இலுமினேட் செய்யப்பட்ட ஸ்ட்ரிப் வழங்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள பம்ப்பர் ரி-ப்ரோஃபைல் செய்யப்பட்டு செங்குத்தாக பொருத்தப்பட்டு இருக்கிறது.

     

    இந்திய சந்தையில் புதிய டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஸ்மார்ட், ஸ்மார்ட் பிளஸ், பியூர், கிரியேடிவ், கிரியேடிவ் பிளஸ் மற்றும் ஃபியர்லெஸ் என ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் உள்ள டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை முழுமையாக கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும். இத்துடன் வென்டிலேட் செய்யப்பட்ட இருக்கைகள், உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் இருக்கைகள் (ஓட்டுனர் மற்றும் அவரின் அருகில் இருப்பவைக்கு மட்டும்) வழங்கப்பட்டு இருக்கிறது.

    2023 டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 118 ஹெச்.பி. பவர், 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், AMT கியர்பாக்ஸ் மற்றும் 7 ஸ்பீடு DCT யூனிட் மற்றும் ஷிஃப்ட் பை வயர் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதில் உள்ள டீசல் என்ஜின் 113 ஹெச்.பி. பவர், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இகோ, சிட்டி, ஸ்போர்ட் என மூன்று விதமான டிரைவ் மோட்களை கொண்டுள்ளது.

    இந்திய சந்தையில் புதிய டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா XUV300, கியா சொனெட், நிசான் மேக்னைட், ரெனால்ட் கைகர் மற்றும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 

    • நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சிவப்பு நிற ஆப்ஷனில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.
    • நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் என்ஜின்கள் வழங்கப்படலாம்.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் டெஸ்டிங்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் லீக் ஆகி உள்ளது. செப்டம்பர் மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சிவப்பு நிற ஆப்ஷனில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

    காரின் வெளிப்புறம் முற்றிலும் புதிய பம்ப்பர்கள் முன்புறம் மற்றும் பின்புறத்தில் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்ப்லிட் ரக ஹெட்லேம்ப்கள், மெல்லிய டி.ஆர்.எல்.-கள், புதிய அலாய் வீல்கள், நீட்டிக்கப்பட்ட ரூஃப் ஸ்பாயிலர், ஷார்க் ஃபின் ஆண்டெனா, ரிவைஸ்டு எல்.இ.டி. டெயில் லைட்கள், கனெக்டிங் லைட் பார் உள்ளது.

     

    முந்தைய ஸ்பை படங்களில் நெக்சான் மாடல் இண்டிகோ நிறம் கொண்டிருப்பது தெரியவந்து இருந்தது. இந்த முறை இந்த எஸ்.யு.வி. மாடல் பிரைட் ரெட் நிறம் கொண்டிருக்கிறது. இது தற்போதைய வெர்ஷனில் உள்ள ஃபிளேம் ரெட் வேரியண்ட் ஆகவே இருக்கும் என்று தெரிகிறது.

    காரின் உள்புறம் அளவில் பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், புதிய யு.ஐ., டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டச் கண்ட்ரோல் வசதி கொண்ட HVAC கண்ட்ரோல்கள், டுவின்-ஸ்போக் ஸ்டீரிங் வீல் உள்ளது.

    நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT யூனிட் வழங்கப்படுகிறது. இந்த காரின் பெட்ரோல் வேரியண்டில் DCT கியர்பாக்ஸ் வழங்கப்படும் என்றும் தெரிகிறது.

    இந்திய சந்தையில் நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கியா சொனெட், மாருதி சுசுகி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா XUV300 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    Photo Source: Upbeat Umang via Carwale

    • டாடா மோட்டார்ஸ்-இன் எலெக்ட்ரிக் வாகன துவக்க விலை ரூ. 8.69 லட்சம் ஆகும்.
    • பயணிகள் வாகனங்களின் அனைத்து பிரிவுகளிலும் எலெக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் முன்னணி இடத்தில் இருந்து வருகிறது. அந்த வகையில், எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் ஒரு லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்து இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இதில் கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் 50 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்து இருக்கிறது.

    தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மட்டும் தான் அனைத்து வித பாடி ஸ்டைல்களிலும் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் ஹேச்பேக் பிரிவில் (டியாகோ EV), செடான் பிரிவில் (டிகோர் EV) மற்றும் எஸ்.யு.வி. பிரிவில் (நெக்சான் EV) போன்ற மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இத்துடன் எக்ஸ்பிரஸ் டி, டிகோர் EV மாடலின் வாடகை கார் வெர்ஷனும் விற்பனை செய்து வருகிறது.

     

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அனைத்து எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையும் ரூ. 8 லட்சத்து 69 ஆயிரம் என்று துவங்கி அதிகபட்சம் ரூ. 19 லட்சத்து 29 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரும் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    2028 ஆண்டு இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் பத்து லட்சம் யூனிட்கள் வரை இருக்கும் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது. இதில் 20 சதவீதம் யூனிட்கள் எலெக்ட்ரிக் பவர்டிரெயின் கொண்டிருக்கும் என்று தெரிவித்து இருக்கிறது.

    • ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் டாடா பன்ச் iCNG மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டது.
    • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் iCNG விலை விவரங்கள் அறிவிப்பு.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது பன்ச் iCNG மாடலை அறிமுகம் செய்தது. முன்னதாக ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய பன்ச் iCNG மாடலின் விலை ரூ. 7 லட்சத்து 10 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது.

    இந்திய சந்தையில் டாடா பன்ச் iCNG மாடலின் முன்பதிவு கடந்த மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய பன்ச் iCNG மாடலில் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

     

    பெட்ரோல் மோடில் இந்த என்ஜின் 84 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. CNG மோடில் இந்த என்ஜின் 72 ஹெச்பி பவர், 103 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    அம்சங்களை பொருத்தவரை டாடா பன்ச் iCNG மாடலில் எலெக்ட்ரிக் சன்ரூப், ஆறு ஏர்பேக், டுவின் சிலிண்டர் CNG டேன்க், CNG மோடில் டைரக்ட் ஸ்டார்ட் வசதி, 7 இன்ச் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.

    • டாடா பன்ச் CNG மாடலில் 1.2 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.
    • டாடா பன்ச் CNG மாடல் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பன்ச் CNG மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்ட நிலையில், டாடா பன்ச் CNG மாடலின் முன்பதிவு நாடு முழுக்க சில விற்பனை மையங்களில் மட்டும் துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    எனினும், டாடா மோட்டார்ஸ் இதுபற்றி எந்த தகவலும் வழங்கவில்லை. அந்த வகையில், தற்போதைய முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமற்ற நிலையில் நடைபெற்று வருகிறது. ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் டாடா பன்ச் CNG மாடலுடன் அல்ட்ரோஸ் CNG மாடலும் காட்சிக்கு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அல்ட்ரோஸ் CNG போன்றே பன்ச் CNG மாடலும் பல்வேறு வேரியன்ட்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.

     

    தற்போது பன்ச் CNG மாடல் விற்பனை மையங்களுக்கு வரத் துவங்கிய நிலையில், விரைவில் இதன் வெளியீடு நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம். பன்ச் CNG மாடலில் ஆறு ஏர்பேக், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், 16-இன்ச் அலாய் வீல்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், எலெக்ட்ரிக் சன்ரூப் வழங்கப்படுகிறது.

    பன்ச் CNG மாடலில் 1.2 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. CNG மோடில் இந்த கார் 76 ஹெச்பி பவர், 97 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    இந்திய சந்தையில் டாடா பன்ச் மாடல் சிட்ரோயன் C3, மாருதி சுசுகி இக்னிஸ், நிசான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. CNG மாடல் என்ற வகையில், இந்த கார் ஹூன்டாய் எக்ஸ்டர் CNG மாடலுக்கு போட்டியாக அமைகிறது. 

    • வால்வோ மற்றும் ஆடி நிறுவனங்களும் இரண்டு புதிய கார்களை அறிமுகம் செய்ய உள்ளன.
    • மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை GLC மாடலை அறிமுகம் செய்கிறது.

    ஆட்டோமொபைல் சந்தையில் பல்வேறு புதிய கார் மாடல்கள் ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதில் பெரும்பாலான மாடல்கள் ஆடம்பர பிரிவில் நிலைநிறுத்தப்பட இருக்கின்றன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் CNG மாடல், டொயோட்டா ருமியன், மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட மாடல்கள் வரும் மாதத்தில் அறிமுகமாகின்றன.

    ஆடம்பர பிரிவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது அதிகம் விற்பனையாகும் எஸ்யுவி மாடலின் இரண்டாம் தலைமுறை மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதே போன்று வால்வோ மற்றும் ஆடி நிறுவனங்களும் இரண்டு புதிய கார்களை அறிமுகம் செய்ய உள்ளன. அந்த வகையில், ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கும் புதிய கார் மாடல் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

     

    டாடா பன்ச் CNG:

    ஆகஸ்ட் மாதத்தின் துவக்கத்திலேயே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பன்ச் CNG மாடலை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த மாடல் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது. மேலும் புதிய பன்ச் CNG மாடலில் டுவின் சிலின்டர் செட்டப் வழங்கப்பட இருக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் GLC:

    மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை GLC மாடலை ஆகஸ்ட் 9-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடல் கடந்த ஆண்டு சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த கார் GLC 300 பெட்ரோல் மற்றும் GLC 220d டீசல் என இரண்டு வெர்ஷன்களில் கிடைக்கிறது.

     

    ஆடி Q8 இ டிரான்:

    ஆகஸ்ட் 18-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஆடி Q8 இ டிரான் மாடல் பேஸ்லிப்ட் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். இந்த மாடல் எஸ்யுவி மற்றும் கூப் என இருவித பாடி ஸ்டைல்களில் கிடைக்கும். முந்தைய மாடல் போன்றே, ஆடி Q8 இ டிரான் 50 மற்றும் 55 என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது. இவற்றில் முறையே 95 கிலோவாட் ஹவர் மற்றும் 114 கிலோவாட் ஹவர் பேட்டரிகள் வழங்கப்படுகின்றன.

    டொயோட்டா ருமியன்:

    டொயோட்டா நிறுவனம் இரண்டு மாருதி சுசுகி கார்களின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் ஒன்று மாருதி சுசுகி எர்டிகா காரின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட ருமியன் எம்பிவி மாடல் ஆகும். டொயோட்டா நிறுவனம் ரூ. 10 லட்சம் பட்ஜெட்டில் எம்பிவி மாடலை விற்பனை செய்யாத நிலையில், இது அந்நிறுவனத்திற்கு சாதமாக இருக்கும் என்று தெரிகிறது.

     

    வால்வோ C40 ரிசார்ஜ்:

    வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த கார் வால்வோ C40 ரிசார்ஜ் எனும் பெயரில் அறிமுகமாகும் என்றும் இதன் வினியோகம் செப்டம்பர் மாத வாக்கில் துவங்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • டாடா பன்ச் CNG மாடலில் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்படுகிறது.
    • டாடா நிறுவன கார்களில், CNG கிட் பெறும் நான்காவது மாடல் இது ஆகும்.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் CNG மாடல் உற்பத்தி துவங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. டாடா டியாகோ, டிகோர் மற்றும் அல்ட்ரோஸ் மாடல்கள் வரிசையில் CNG கிட் பெறும் நான்காவது கார் மாடலாக பன்ச் மாடல் இடம்பெற்று இருக்கிறது.

    அல்ட்ரோஸ் CNG மாடலில் உள்ளதை போன்றே புதிய பன்ச் CNG மாடலிலும் டூயல் சிலின்டர் செட்டப் வழங்கப்படுகிறது. இது காரின் பூட் பகுதியை அதிகளவில் ஆக்கிரமிக்காது. புதிய பன்ச் CNG மாடலிலும் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

     

    இந்த என்ஜின் 86 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. பன்ச் CNG வேரியன்டை நேரடியாக CNG மோடிலும் ஸ்டார்ட் செய்ய முடியும். பல்வேறு CNG கார்களிலும் இந்த வசதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புதிய காரின் வெளிப்புறம் i-CNG பேட்ஜ் தவிர வேறு எந்த மாற்றும் மேற்கொள்ளப்படலில்லை.

    புதிய பன்ச் CNG மாடலின் உள்புறம் 7.0 இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி, 16 இன்ச் அலாய் வீல்கள், என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், ஒட்டுனர் இருக்கை உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    • இந்திய சந்தையில் டாடா அல்ட்ரோஸ் மாடலின் இரண்டு புதிய வேரியன்ட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
    • புதிய அலட்ரோஸ் வேரியன்டில் கூடுதல் அம்சங்கள், 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது அல்ட்ரோஸ் மாடலின் XM மற்றும் XM(S) வேரியண்ட்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய வேரியன்ட்கள் XE மற்றும் XM+ வேரியன்ட்களின் கீழ் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. புதிய வேரியன்ட்களின் விலை ரூ. 6 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது.

    அம்சங்களை பொருத்தவரை புதிய அல்ட்ரோஸ் XM வேரியன்டில் ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட கன்ட்ரோல்கள், உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் ஓட்டுனர் இருக்கை, எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் மற்றும் மடிக்கக்கூடிய ORVMகள், 16 இன்ச் வீல் மற்றும் கவர்கள் வழங்கப்பட்டுள்ளன. டாடா அல்ட்ரோஸ் XM (S) வேரியன்டில் எலெக்ட்ரிக் சன்ரூஃப் வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    இதுதவிர டாடா அல்ட்ரோஸ் XE, XM+, XM+ (S), XT போன்ற வேரியன்ட்களில் புதிய வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. டாடா அல்ட்ரோஸ் XE மாடலில் ரியர் பவர் வின்டோ, ரிமோட் கீலெஸ் என்ட்ரி, உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை வழங்கப்பட்டு உள்ளது.

    அல்ட்ரோஸ் XM+ மற்றும் XM+ (S) வேரியன்ட்களில் ரிவர்ஸ் பார்கிங் கேமரா, குரூயிஸ் கன்ட்ரோல், 16 இன்ச் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன. டாடா அல்ட்ரோஸ் XT வேரியன்டில் உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை மற்றும் ரியர் டிஃபாகர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய டாடா அல்ட்ரோஸ் XM மற்றும் XM (S) வேரியன்ட்களில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 87 ஹெச்பி பவர், 115 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டிரான்ஸ்மிஷனுக்கு 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இந்திய சந்தையில் டாடா அல்ட்ரோஸ் மாடல் மாருதி சுசுகி பலேனோ மற்றும் ஹூண்டாய் i20 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய டாடா அல்ட்ரோஸ் XM (S) வேரியன்டின் விலை ரூ. 7 லட்சத்து 35 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • டாடா கர்வ் மாடலில் எல்இடி லைட் பார்கள், எல்இடி டெயில் லைட்கள், ஃபாக்ஸ் ஸ்கிட் பிலேட்கள் உள்ளன.
    • டாடா கர்வ் ப்ரோடக்ஷன் ரெடி மாடலில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஐசி என்ஜின் கொண்ட கர்வ் கூப் எஸ்யுவி மாடலை ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைத்தது. புதிய டாடா கர்வ் மாடலின் வெளியீடு அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் டாடா கர்வ் மாடல் இந்திய சந்தையில் டெஸ்டிங் செய்யப்படும் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    ஸ்பை படங்களின் படி டாடா கர்வ் மாடல் முழுமையாக மறைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த காரின் பின்புறம் போலியான எக்சாஸ்ட் வழங்கப்பட்டு, கூப் சில்ஹவுட் மறைக்கப்பட்டுள்ளது. இத்துடன் நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், பிளாக்டு-அவுட் வீல்கள், ஏ பில்லரில் மவுன்ட் செய்யப்பட்ட ORVM-கள் வழங்கப்பட்டுள்ளன.

     

    இத்துடன் புதிய டாடா கர்வ் மாடலில் எல்இடி லைட் பார்கள், எல்இடி டெயில் லைட்கள், ஃபாக்ஸ் ஸ்கிட் பிலேட்கள், கான்டிராஸ்ட் நிறத்தால் ஆன ORVMகள் மற்றும் ரூஃப் வழங்கப்படுகிறது. கர்வ் கான்செப்ட் மாடலில் 2-ஸ்போக் மல்டி பன்ஷன் ஸ்டீரிங் வீல், ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய கியர் லீவர், டிரைவ் மோட்களுக்காக சுழலும் டயல் உள்ளது.

    கர்வ் ப்ரோடக்ஷன் ரெடி மாடலில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த என்ஜின் 122 ஹெச்பி பவர், 225 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. புதிய டாடா கர்வ் மாடல் CNG ஆப்ஷனிலும் கிடைக்கும் என்று தெரிகிறது. 

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜூன் மாத வாகன விற்பனை வளர்ச்சி பெற்றுள்ளது.
    • டாடா நிறுவனம் வருடாந்திர அடிப்படையில் 1 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜூன் 2023 மாதத்தில் மட்டும் 47 ஆயிரத்து 235 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 45 ஆயிரத்து 197 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது.

    அதன்படி கடந்த மாத விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வருடாந்திர அடிப்படையில் ஐந்து சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 245 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

    கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 248 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. உள்நாட்டில் மட்டும் 80 ஆயிரத்து 383 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இதன் மூலம் டாடா நிறுவனம் வருடாந்திர அடிப்படையில் 1 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 79 ஆயிரத்து 606 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

     

    ஜூன் 2023 மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 47 ஆயிரத்து 235 யூனிட்களும், கடந்த ஆண்டு இதே மாதம் 45 ஆயிரத்து 197 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இதில் டாடா நிறுவனம் வருடாந்திர அடிப்படையில் 5 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

    "2024 முதல் காலாண்டில் பயணிகள் வாகன துறையில் எஸ்யுவி மற்றும் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் புதிய வாகனங்கள் அமோக வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த காலாண்டில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 450 யூனிட்கள் விற்பனை செய்து இருக்கிறது. இது முந்தைய ஆண்டை விட 8 சதவீதம் அதிகம் ஆகும்," என்று டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன பிரவு நிர்வாக இயக்குனர் சைலேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

    ×